கணவரின் முதல் திருமணம் குறித்து பேசிய ஹன்சிகா - வைரலாகும் ட்ரெய்லர்!

Hansika Motwani Viral Video Marriage
By Sumathi 2 மாதங்கள் முன்
Report

ஹன்சிகாவின் திருமண ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹன்சிகா திருமணம்

நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

கணவரின் முதல் திருமணம் குறித்து பேசிய ஹன்சிகா - வைரலாகும் ட்ரெய்லர்! | Hansika Is Talking About Past Marriage Trailer

இந்நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் முன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். தொடர்ந்து ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.

ட்ரெய்லர் ரிலீஸ்

திருமணத்தை வீடியோவை டிஸ்னி+ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. அந்த வீடியோவின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு கவுதம் மேனன் வாய்ஸ் கொடுத்துள்ளார். அதில், யாருடைய கடந்த காலத்தையும் பார்க்கக் கூடாது என்று நீங்கள் தானே சொல்லிக் கொடுத்தீர்கள் என தன் தாயிடம் கூறியிருக்கிறார்.

இதனை அவரது கணவரின் முதல் திருமணத்தை பற்றியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சொஹைலுக்கும், ரிங்கி என்பவருக்கும் கோவாவில் நடந்த திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.