பருவமெய்த ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டாரா ஹன்சிகா - அதிர்ச்சி தகவல்
அதிவேகமாக வளர்வதற்காக ஹன்சிகா ஹார்மோன் ஊசி செலுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஹன்சிகா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில், சோஹேல் கதுரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில், இவரது கணவர் சோஹேலுக்கு இது இரண்டாவது திருமணம் என்றும் ஹன்சிகா தனது தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்துகொண்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
சர்ச்சைக்கு விளக்கம்
அதனைத் தொடர்ந்து, ஹன்சிகாவின் திருமண டாக்குமென்ட்ரி லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில், சில ஆண்டுகளிலேயே அவர் ஹீரோயினாக அறிமுகமானதால் அவர் அதிவேகமாக வளர்வதற்காக ஹார்மோன் ஊசி செலுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனையடுத்து அதற்கு விளக்கமளித்துள்ள ஹன்சிகா, இது உண்மையாக இருந்திருந்தால் நான் டாடா பிர்லாவை விட பணக்காரராக இருந்திருக்க வேண்டும். நாங்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள. எங்கள் மக்கள் 12 - 16 வயதுக்குள் பருவமெய்திவிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.