தேசிய அரசியலில் குதித்தார் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் - “பாரத் ராஷ்டிரிய சமிதி” கட்சி தொடக்கம்
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசிய கட்சியை தொடங்கியுள்ளார்.
கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தல்
தெலுங்கானாவில் 2வது முறையாக ஆட்சியில் உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து கட்சியின் மாவட்ட தலைவர்கள் கட்சி தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர ராவ்விடம் தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 12-ம் தேதி சட்டசபையில் பேசிய சந்தரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்க போவதாக அறிவித்தார்.
தேசிய கட்சியாக அறிவிப்பு
பாஜகவுக்கு எதிராக புதிய அணியை உருவாக்க சந்திரசேகர ராவ், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். இதே போன்று பிற கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார். தசரா பண்டிகையையொட்டி பிரகதிபவனில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சிறப்பு பூஜைகளை நடத்தினார்.

அதை தொடர்ந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தேசிய கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று வெளியிட்டார்.
தேசிய அரசியலில் இறங்குவதற்கு ஏதுவாக 'பாரத் ராஷ்டிரிய சமிதி' என்று கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி-ஐ, பாரத் ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்ற பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தேசிய கட்சிக்கு, தற்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு உள்ள கார் சின்னத்தையே ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
#TRS - Telangana Rashtra Samithi
— Hi Hyderabad (@HiHyderabad) October 5, 2022
is now#BRS - Bharat Rashtra Samithi pic.twitter.com/4WCvEsUq1d