ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

Narendra Modi India
By Thahir Nov 16, 2022 07:30 AM GMT
Report

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜி20 மாநாடு

இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நேற்று (நவம்பர் 15) மற்றும் இன்று (நவம்பர்16) நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார்.

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு | Handover Of G20 Leadership To India

ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளைச்சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்தியாவிடம் ஒப்படைப்பு 

ஏற்கனவே குறிப்பிட்டது போல, அடுத்த ஓராண்டிற்கு ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தான் தலைமை வகிக்கும் என்பது, போல, அதற்கான பொறுப்பு இன்று பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது.

டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு 2023, நவம்பர் 30 வரையில் ஜி20 மாநாட்டின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. அதன் படி அடுத்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு இந்தியாயாவில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.