கேமரா மூலம் சிறப்பாக புகைப்படங்களை எடுத்து தூள் கிளப்பும் மாற்றுத்திறனாளி இளைஞர்

india photographer camera
By Jon Feb 20, 2021 05:45 AM GMT
Report

அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த இரு வேறு கருத்துகள் உலகம் முழுவதும் நிலவி வருகிறது. ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் எப்போதும் பயனுள்ளதாகவே இருக்கின்றன. அந்த வகையில், பிரனவ் லால் எனும் இளைஞர் சிறப்பு கேமிரா மூலம் தனது புகைப்படக் கலையை மிக அழகாக வெளிக்காட்டியிருக்கிறார்.

vOICe எனும் சிறப்பு புகைப்படக் கருவி, ஒலியின் அலையை சரியான முறையில் கணித்து அதன் மூலம் புகைப்படத்தினை எடுக்க வழிவகை செய்கின்றது. இதன் மூலம் பிரனவ் புகைப்பட உலகில் தனது பயணத்தினை தொடங்கி இருக்கிறார்.

இது குறித்து பிரனவ் பேசுகையில், தான் மெதுவாக இந்த புகைப்படக் கருவி மூலம் புகைப்படங்களை எடுக்க பழகினேன். நான் இதுவரை கண்டதை இந்த உலகத்துடன் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அதற்கு இந்த கேமரா உதவிகரமாக உள்ளது என்றார்.

கேமரா மூலம் சிறப்பாக புகைப்படங்களை எடுத்து தூள் கிளப்பும் மாற்றுத்திறனாளி இளைஞர் | Handicapped Young Boy Image

"இது புகைப்படக் கலையையும் கடந்து, ஒரு சூழலை புரிந்துகொள்வதற்கான பயணத்தின் ஒரு பாதையாக இதை நான் கருதுகிறேன். இந்த பயணத்தில் நான் ஒரு உண்மையான பயணியாக இருக்கிறேன்." என்றார்.

இவர் இயற்கை காட்சிகள் மற்றும், கட்டிடக் கலைகளை முதன்மையாக படமெடுத்து வருகிறார்.