டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் - தேசிய கொடியை ஏந்தும் தமிழக வீரர்

today handicapped paralympic
By Anupriyamkumaresan Aug 24, 2021 04:45 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்க உள்ள பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்.

கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அதற்கு அடுத்து 1960-ல் 23 நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் பாராலிம்பிக்கில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல் பாதிப்புக்கு ஏற்ப அவர்களுக்கான விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் - தேசிய கொடியை ஏந்தும் தமிழக வீரர் | Handicapped Paralympic Today 4500 Players Join

இந்த போட்டியானது செப்டம்பர் 5-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்ளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் கைப்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.

கடந்த 2016ல் ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார்.

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் - தேசிய கொடியை ஏந்தும் தமிழக வீரர் | Handicapped Paralympic Today 4500 Players Join

தமிழக வீரர் மாரியப்பன் தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவரை தவிர வினோத்குமார் (வட்டு எறிதல்) தேக்சந்த் (ஈட்டி எறிதல்), ஜெய்தீப், சகினா (வலு தூக்குதல்) ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் - தேசிய கொடியை ஏந்தும் தமிழக வீரர் | Handicapped Paralympic Today 4500 Players Join