கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு - மருத்துவர்களின் மெத்தனமே காரணம்..தாய் கதறல்..!

Chennai Death
By Thahir Aug 06, 2023 03:57 AM GMT
Report

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை இன்று காலை உயிரிழந்தது.

எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த உறைதல் பிரச்சனை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனைக்கு மாற்றப்பட்டது.

இக்குழந்தைக்கு கடந்த மாதம் 2ம் தேதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். தொடர்ந்து மருத்துமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் குழந்தை இன்று காலை உயிரிழந்தது.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு - மருத்துவர்களின் மெத்தனமே காரணம்..தாய் கதறல்..! | Hand Amputated Child Fatality In Chennai Egmore

முன்னதாக, குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறாக சிகிச்சையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

விசாரணை குழு மறுப்பு 

குழந்தையின் கை வீங்கியதால் செவிலியர்களை தாய் அழைத்ததாகவும், ஆனால், அவர்கள் அலட்சியமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், மருந்து கசிவால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ பாதிப்பு ஏற்படவில்லை. Pscudomonas கிருமிகளால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.