பிப்ரவரியில் தொடங்கும் பட்ஜெட்- இன்று அல்வா வழங்கினார் நிதியமைச்சர்

minister finance state
By Jon Jan 23, 2021 02:36 PM GMT
Report

மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மக்களவையில் 2021- 22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் வரும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது.

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, ஏற்கனவே செய்தியாளர்களிடம் பேசியபோது, பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இம்மாதம் 29-ஆம் தேதி கூட இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று நிதியமைச்சகத்தில் அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா விநியோகித்தார். பட்ஜெட் தாக்கலாகும் முன் அல்வா சமைத்து விநியோகிப்பது நிதியமைச்சகத்தில்பாரம்பரியமாக நடைபெறும் முறையாகும்.