இனிமேல் வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க்
Hallmark For Silver: தங்கத்தை தொடர்ந்து வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021ம் ஆண்டு முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஒழுங்குமுறை கண்காணிப்பை பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்காக 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்(HUID) முறை மற்றும் உள்கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 1ம் தேதி முதல் 77 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளி நகைகளில் PIS முத்திரை, SILVER, தூய்மையின் தரம் மற்றும் HUID எண் இடம்பெறும்.
இதனை PIS Care செயலி மூலம் வாடிக்கையாளர்கள் சரிபார்க்கலாம்.