புயல் எதிரொலி - தள்ளிப்போகிறது அரையாண்டு தேர்வுகள் - அதிகாரபூர்வ அறிவிப்பு !!
மிக்ஜாங் புயல் பாதிப்பின் காரணமாக தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு
கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. மீட்புப்பணிகள் நடைபெற்று தற்போது தான் இயல்வு நிலை திரும்பிவரும் நிலையில், இன்னும் சில இடங்களில் மீட்புப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
கடந்த ஒருவார காலமாகவே இந்த 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து திறக்கப்படாமல் இருந்து வருகின்றது. நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் நிலையில், அங்கு கட்டிடங்களை சீர் செய்து மாணவர்களை வரவேற்க நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இதற்கிடையில், நாளை முதல் தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் துவங்கும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் காரணமாக இன்னும் சில இடங்களில் நிலை சீராகாத நிலையில், தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும் என்று கேள்விகள் எழதுவங்கின.
தள்ளிப்போகும் தேர்வுகள்
நடப்பாண்டை பொறுத்தவரையில் (2023-24 கல்வியாண்டு) 11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் 22 வரை தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை டிசம்பர் 11 முதல் 21 வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அரையாண்டு தேர்வு தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நாளை துவங்கியிருந்த தேர்வுகள் வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.