டிவி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் - விரைவில் வெளியாகிறது அதிரடி அறிவிப்பு
நீண்ட் இடைவெளிக்குப் பின் நடிகர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே உலகம் முழுவதும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய்யின் மேடைப் பேச்சை கேட்க முடியாதா என ரசிகர்கள் ஏங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விஜய் சன் டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளாராம். படக்குழுவினருடன் அவர் கலந்துக் கொள்ளும் அந்நிகழ்ச்சி ஏப்ரல் 10-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்க கூறப்படுகிறது.