தலையில் 6 நாட்களில் முடி வளர வைக்கும் அற்புதக்காய் - சித்தர்கள் கண்டறிந்த மருத்துவம்
எல்லாப் பெண்களும் தங்களுடைய தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பெண்களுக்கு அவர்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவர்களின் தலைமுடி தான்.
ஆனால் இன்றைய சூழலில் பல காரணங்களால் தலைமுடி பிரச்னையினை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சந்தித்து வருகிறார்கள். தலைமுடி உடைந்து போவது, தலைமுடி நுனியில் வெடிப்பு, பொடுகு பிரச்சினை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.
கவலை வேண்டாம்... சித்தர்கள் சொன்ன இந்த அற்புதக் காயைப் பயன்படுத்தி பாருங்கள்... அதிசயத்தை நீங்களே பார்ப்பீர்கள்...
குமட்டிக்காய்
சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படும் காய்களில் ஒன்று குமட்டி காய். இந்தக் காய் பார்ப்பதற்கு தர்பூசணிக்காய் போல் அளவில் சிறியதாக இருக்கும். சித்த மருத்துவத்திலும், வேளாண்மையில் தாவர பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகின்றது.
குமட்டிக்காய் அல்லது குமிட்டிகாய் எனப்படும் இது ஒரு படர்கொடி தாவரமாம். இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவி செய்கிறது.
இந்தக் காயை ஆற்றுத்தும்மட்டி, கொம்மட்டி, வரித்தும்ம்பேய்கும்மட்டி என்று பல பெயர்கள் உண்டு. குமட்டிக்காய் ஆசியா. ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் இந்த குமட்டிக்காய் கொடி வளர்கிறது.
சொட்டைத் தலையில் 6 நாட்களில் முடி வளர வைக்கும் இந்த குமட்டிக்காயின் பயன்களைப் பற்றி பார்ப்போம்
தலையில் ஏற்படும் புழுவெட்டுக்கு புழுவெட்டு
எனும் நோய் தலையில் முடி இருக்கும் இடங்களில் வட்ட வட்டமாக முடியை உதிரச்செய்யும் நோயாகும். இந்நோய் தலைமுடி, மீசை, தாடி மற்றும் புருவமுடிகளைக் கூட தாக்கக் கூடியது. இந்நோயால் தலைமுடி உதிர்ந்து விடும். முடி உதிர்ந்த இடத்தில் காயை இரண்டாக வெட்டி புழுவெட்டு இருக்கும் இடத்தில் தேய்த்து வரவேண்டும். இப்படி தொடர்ச்சியாக பூசி வந்தால், சில வாரங்களில் முடி முளைத்து விடும்.
சொட்டைத் தலையில் முடி வளர
முடி உதிர்தல், பொடுகு, தலையில் அரிப்பு உள்ளிட்ட தலை முடி பிரச்னைக்கு இந்த குமிட்டி காய் பூரண குணமளிக்கும். சொட்டை தலையில், குமட்டிக்காயின் சாற்றை எடுத்து தொடர்ந்து தேய்த்து வந்தால் 6 நாட்களில் மீண்டும் முடி முளைக்கும்.