முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தபட்ட மருந்து..10 நிமிடத்தில் கண்களில் வீக்கம் - அதிர்ச்சி சம்பவம்!
முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தபட்ட மருந்தால் 60 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள காளி மாதா கோவிலில் வழுக்கைத் தலைக்கு சிகிச்சை இலவச முகாம் அளிக்கப்படுவதாக இன்ஸ்டாவில் விளம்பரம் வெளியானது.இதில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்டோர் அந்த முகாமில் பங்கேற்றனர்.
அப்போது அரிய வகை மூலிகைகளால் காய்ச்சி எடுத்த பிரத்தியேக மருந்தை வழுக்கையில் தடவினால் விரைவில் முடி முளைக்க ஆரம்பித்து விடும் என விளம்பரப்படுத்தி உள்ளனர். பின்னர் அந்த மருந்தை தடவிய 10 நிமிடத்தில் கண்களில் வீக்கம் ஏற்பட்டு நீர் வடிய ஆரம்பித்தது.
மேலும் கண்ணில் பயங்கர எரிச்சலும் ஏற்பட்டதால் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகாமை நடத்திய அமன்தீப் சிங் மற்றும் தஜிந்தர் பால் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரனையில் முறையாக அனுமதி பெறாமலும், சட்ட விரோதமாகவும் இச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.