ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற எளிய குறிப்புகள்

girl black vitamin
By Jon Feb 02, 2021 10:26 AM GMT
Report

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை.

அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். தலைமுடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது.

மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.

அவகேடோ பழத்தை மசித்து தலையில் தடவி 1 மணிநேரம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள சிறந்த பலன் கிடைக்கும்.

இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடையும்.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெய்யை தனியாக எடுத்து, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். ஒரு வாரத்தில் 2 முறை இந்த செயலை செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமைப் பெறும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், மயிர்கால்களை பலப்படுத்தும் மற்றும் தலைமுடி உடைவதைத் தடுக்கும்.

அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, தலை முழுவதும் தடவி 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.

தேங்காய் க்ரீம்மை முடியின் வேர் முதல் முனை வரை தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த முறையை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், தலைமுடி வலிமையடைந்திருப்பதை நன்கு காணலாம்.

பாதாம் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் மற்றும் இதர ஊட்டமளிக்கும் உட்பொருட்கள், மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும். எனவே இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெய்யை ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.