அற்புத பயன்தரும் ஒரு சில வீட்டு வைத்திய குறிப்புகள்
முகப்பொலிவிற்கு: உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். முடி உதிர்வதை தவிர்க்க: நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
இரத்த சோகையை போக்க: பீர்க்கங்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும். பசி உண்டாக: புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சை பழச்சாறு 3 பங்கு கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் குடித்து வர பசி உண்டாகும் சேற்றுபுண் குணமாக: காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுபுண் குணமாகும்.
வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும். வீக்கம் குறைய: மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும். குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து 1/4 கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். காய்ச்சல் குணமாக: செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.
நாக்கில் புண் ஆற: அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.