‘‘அழாதடா கண்ணு ’’ கச்சேரி மேடையான சலூன் கடை : வைரலாகும் வீடியோ!

child viralvideo haircut
By Irumporai Sep 12, 2021 05:32 PM GMT
Report

குழந்தைகள் எப்போதும் சலூன் கடை சென்று முடி வெட்டுவதற்கு அதிகமாக அழத் தொடங்குவார்கள். அந்த சமயத்தில் குழந்தைகளை சமாதானம் செய்வது சற்று கடினமான காரியம் தான்.

இந்த நிலையில் முடி திருத்தும் கடையில் குழந்தை ஒன்று முடி வெட்டும் போது அழுதுள்ளது. அக்குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் செய்த செயல் வீடியோவாக ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் குழந்தை முடி வெட்டும் போது மிகவும் பயந்துஅழத்தொடங்கியுள்ளது அதற்கு அங்கு இருந்த முடி திருத்தும் நபர்கள் அனைவரும் பாட்டு பாடி குழந்தையை மகிழ்ச்சி அடைய செய்து அந்த குழந்தை அழுகையை நிறுத்தி அந்த நபர்கள் பாட்டுவதை அழகாக வேடிக்கை பார்க்கிறது.

தற்போது இந்த வீடியோவினை பார்த்த ட்விட்டர் வாசிகள் அந்த நபர்களின் செயல் பார்க்கவே எவ்வளவு கியூட்டாக உள்ளது. இதை பார்க்கும் போது அவ்வள்ளவு அழகாக உள்ளது போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.