சசிகலாவை சந்தித்தார் ஹைதர் அலி - முஸ்லீம் வாக்குகள் சிதறுமா?

seeman edappadi Dhinakaran
By Jon Mar 02, 2021 06:23 PM GMT
Report

தமமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொதுச் செயலாளர் ஹைதர் அலியை சசிகலா சந்திக்கவிருப்பது அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் களத்தில் பல திருப்பங்கள் நடந்து வருகிறது. பிரதான கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்த்த கட்சிகளெல்லாம் கூட்டணியை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய பரபரப்பான சூழலில், திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதை அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மமகவின் முக்கிய அங்கமான தமமுக, இந்த தொகுதி பங்கீடு முறையை ஆதரிக்க மறுக்கின்றது.

முஸ்லீம்களின் பேராதரவை பெற்றிருக்கும் மமகவுக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஹைதர் அலியை சசிகலா சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சசிகலாவை சந்தித்தார் ஹைதர் அலி - முஸ்லீம் வாக்குகள் சிதறுமா? | Haider Ali Meets Sasikala Muslim Votes Scatter

முஸ்லீம்களின் வாக்குகளை தன் பக்கம் இழுக்க திமுக முனைப்பு காட்டிக் கொண்டுள்ளது. அதனாலேயே பேச்சுவார்த்தையில் அக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், சசிகலா ஹைதர் அலியை சந்திப்பது முஸ்லீம் வாக்குகளை சிதறடிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. சசிகலாவை தொடர்ந்து ஹைதர் அலி டிடிவி தினகரனையும் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.