H3N2 வைரஸ் இவர்களை தாக்க அதிக வாய்ப்பு : மத்திய அரசு எச்சரிக்கை
H3N2 வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
H3N2 வைரஸ்
H3N2 வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, இந்த வைரஸின் தாக்கம் ஒருவருக்கு இருந்தால் தொண்டைபுண், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்றவை அறிகுறிகளாக கருதப்படும்.
ஆகவே சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையினை அணுகவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் ஹரியான மாநிலங்களில் H3N2 வைரஸ் காய்ச்சல் காரணாமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இவர்கள் கவனம்
இந்த நிலையில் H3N2 வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து மத்திய சுகாதரத்துறை செயலாளர் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகள் போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்து கொள்ள வேண்டும் வைரஸ் காய்ச்சலால் கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உடல் பருமன், நீரிழிவு நோய், கல்லீரல், கணைய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களும் அதிகம் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.