அஜித் பைக்கில் இருந்து கீழே விழ இதுதான் காரணமா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்

valimai ajithkumar வலிமை அஜித்குமார் ajithbikeaccident
By Petchi Avudaiappan Dec 27, 2021 10:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

வலிமை ஷூட்டிங்கில் அஜித்துக்கு காயம் ஏற்பட என்ன காரணம் என்பதை  இயக்குநர் ஹெச். வினோத்.தெரிவித்துள்ளார் 

அஜித்குமார் - இயக்குநர் எச்.வினோத் - தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் மீண்டும் வலிமை படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

என்ற போதிலும் படத்தைக் கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே வலிமை படத்தில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சியை ஷூட் செய்தபோது விபத்து ஏற்பட்டு அஜித்துக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் சேஸிங் காட்சியை படமாக்குவது சாதாரண விஷயம் அல்ல. பார்த்து பார்த்து தான் ஷூட்டிங் நடத்தினோம். முடிக்கப்படாமல் மண் அதிகம் இருந்த சாலையால் தான் அஜித் சாருக்கு விபத்து ஏற்பட்டது என்று ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். பைக் ஸ்டண்ட் காட்சியை படமாக்க ஹைதராபாத், புனே, லக்னோவில் அனுமதி கிடைக்கவில்லை. என்பதால் மீஞ்சூர் சாலையில் ஷூட்டிங் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.