கவர்னர் கிட்ட வேலைய காட்டினா வாலை வெட்டிடுவோம் - எச்.ராஜா எச்சரிக்கை
தமிழக ஆளுநரிடம் வேலையை காட்டினால் என்ன நடக்கும் என அரசியல் கட்சிகளுக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சாத்தரசங்கோட்டை அருகே உள்ள பெரியகண்ணனூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ரத்ததான கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நரேந்திர மோடி 20 ஆண்டுகள் முதல்வராகவும், பிரதமராகவும் சேவையாற்றியதை கெளரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாள் இன்று முதல் 21 நாட்கள் கொண்டாடப்படுவதாகவும், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள என்.வி.ரவியை கண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் அச்சப்படுவது ஏன் என்று தெரியவில்லை என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ஆளுநரை விமர்சித்து ஊலையிடும் நரிகள் தவறு செய்திருக்கலாம்.அவர்கள் ஆளுநரிடம் ஏதேனும் வேலையை காட்ட நினைத்தால் வாலை ஒட்ட நறுக்குவோம் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் எச்.ராஜா பேசியுள்ளார்.