இந்து சாதுக்களைப் பற்றி பேசுவோர் பின்னணி வெளியே வரும் - எச்.ராஜா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ‘‘இந்து. சன்னாசிகளை பற்றி பேசுவோர் பின்னணி குறித்து வெளியே வரும்’’ எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில் ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் உத்தரவை வரவேற்கிறேன். ஆனால் இதில் மறைமுகமாக கொள்ளை நடக்க வாய்ப்பு உள்ளது.
அறநிலையத்துறை கோயில்களுக்கு 4 லட்சம் ஏக்கருக்கு மேல் நிலம், 22 ஆயிரம் வணிக வளாகங்கள், 33 ஆயிரம் மனையிடங்கள் உள்ளன. கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பிற்க்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை கேட்டால் சத்குருவை அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் மிரட்டுகிறார். சற்குருவை கர்நாடாககாரர் என போசுபவர், பெரியாரை எப்படி அழைப்பார்? இந்துக்களுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் பேசலாமா?.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்பேன் என்று பி.டி.ஆர்.தியாகராஜன் சொன்னால், நான் என் வார்த்தையை வாபஸ் வாங்கி கொள்கிறேன்.
இந்து சாது, சன்னாசிக்களை பற்றி யார் இழிவாக பேசினாலும், அவர்களது பின்னணி வெளியே வரும்.
பொட்டு வைத்து கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் இந்துவா? மத விசுவாசம், நம்பிக்கை வேண்டும்” என்றார்.