இந்துக்களுக்கு விரோதமாக எழுதிய பேனாவுக்கு நினைவுச்சின்னம் தேவையா ? - எச்.ராஜா கேள்வி
இந்துக்களுக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் எழுதிய பேனாவுக்கு நினைவுச்சின்னம் தேவையா.என கேள்வி எழுப்பினார்
எச்.ராஜா
புதுச்சேரியில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.அப்போது பேசியவர், தமிழகத்திற்கு புதுச்சேரிக்கு என்ன கொடுத்தார்கள் என கேட்கிறார்கள் .உட்கட்டமைப்பை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா கடனை மத்திய அரசு அளிக்கிறது.
இதனை வாங்க வேண்டியது மாநில அரசுகள்தான் என்றார். 15 வயது பெண் குழந்தை இருந்தால் எவ்வளவு வலி என தெரியும்.இந்த வலியை உணர்ந்த பிரதமர் மோடி ஸ்வச்பார்த் திட்டம் மூலம்கழிவறை கட்டியது பெண்களின் மானத்தை காப்பதற்கு தான் என்றும் ராஜா தெரிவித்தார்.
பேனா நினைவு சின்னம் தேவையா
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா பேனா சின்னம் குறித்த கேள்விக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் வைக்கக்கூடாது. எத்தனை இந்து விரோதமாக ஆபாசமாக எழுதிய பேனாவுக்கு ஒரு நினைவு சின்னமா. இந்துக்களுக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் எழுதிய பேனாவுக்கு நினைவுச்சின்னம் தேவையா.என கேள்வி எழுப்பினார்.
விடியா ஆட்சி
அதானி பிரச்சனையால் வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்து தான் எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமைதியாகி விட்டன என்று கூறிய , எச்.ராஜா 2024 இல் தேசிய அளவில் விடியல் ஆட்சி அமையும் என தமிழக முதல்வர் கூறியிருப்பதற்கு ஐயோ பாவம்.
ரோட்டில் எத்தனை பேர் அடிவாங்க போராறாங்க தெரியலை. அமைச்சர்கள் கட்சி காரர்களையும் மக்களையும் அடிக்கிறார்கள். இவர்களுக்கு ஈரோட்டில் மக்கள் பதில் கொடுப்பார்கள்.இதுவிடியாத ஆட்சி என்பதே சரி என எச். ராஜா தெரிவித்தார்.