எச்.ராஜா மீதான சிறை தண்டனை நிறுத்திவைப்பு - என்ன காரணம்?
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
எச்.ராஜா
பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளராக இருந்தவர் எச்.ராஜா. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பிற்காக வெளிநாடு சென்ற போது ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியது மற்றும் பெரியார் சிலையை உடைப்பேன் என பேசியது தொடர்பாக ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
6 மாதம் சிறை
இந்த வழக்கு விசாரணை எம்.பி, எம்எல்ஏ க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு வழக்கிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து எச்.ராஜா தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய அவகாசம் கேட்டதால் எச்.ராஜா மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.