பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆன்மீகம் சொல்லி தர வேண்டும் - எச்.ராஜா
அரசு பள்ளிகளில் கற்பித்தல் தரம் குறைவாக உள்ளது என எச் ராஜா பேசியுள்ளார்.
வக்பு வாரியம்
திருச்சி அருகே உள்ள திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது, திருச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுக்கு சொந்தம் என வக்பு வாரியம் கூறுகிறது. கடந்த 995 ஆம் ஆண்டில் வக்பு வாரியத்திற்கு சொந்தமாக 4 லட்சம் ஏக்கர் மட்டுமே இருந்தது.
ஆன்மீகம்
ஆனால் இன்று 9,40,000 ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக உள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகதிற்கு அடுத்தபடியாக அதிக நிலங்களை வக்பு வாரியம் வைத்துள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் வக்பு வாரியம் நிலங்களுக்கு உரிமை கோருவது ஏற்கத்தக்கது அல்ல.
திராவிட அரசு ஆட்சிக்கு வந்ததும் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகம் பற்றியும் நீதி போதனை பற்றியும் குழந்தைகளுக்கு பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும்.
அரசு பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவாக உள்ளது. இதனால் தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. 1300 க்கு மேற்பட்ட பள்ளிகளில் 10 க்கு குறைவான மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர். என பேசியுள்ளார்.