பெரியாரை மீண்டும் வம்புக்கு இழுத்த ஹெச்.ராஜா- கொந்தளித்த மக்கள்

periyar h.raja dravidam public angry
By Anupriyamkumaresan Aug 16, 2021 06:29 AM GMT
Report

நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஏராளமான அரசியல் தலைவர்கள், விடுதலைக்காக போராடிய வீரர்களை நினைவு கூர்ந்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில் சுதந்திர தினம் குறித்து பெரியார் கூறிய கருத்துகள் திராவிடம் இதழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதில் பெரியார் ஆகஸ்ட் 15 ஒரு கருப்பு தினம் என்றும், பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து பிராமணர்கள் கையில் சிக்கி கொண்டோம் என்று கூறியிருப்பார்.

இதனால் அந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும் கூறியிருப்பார். இந்த புத்தகத்தின் கவர் பக்கத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு, இவனுங்கலாம் சுதந்திரத்திற்காக போராடினார்களாம் என்று ஏளனமாக பெரியாரை கிண்டல் செய்துள்ளார். இதனை பார்த்த திராவிடர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

பெரியாரை மீண்டும் வம்புக்கு இழுத்த ஹெச்.ராஜா- கொந்தளித்த மக்கள் | H Raja Said Bad About Periyar Viral Angry