சென்னையில் சிஸ்டத்தை சரி செய்தால் போதும் வெள்ளம் வராது : ஹெச்.ராஜா

pressmeet hraja chennairain
By Irumporai Nov 11, 2021 01:34 PM GMT
Report

சென்னை வெள்ளத்தால் பாதிக்காத வகையில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாகனேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, :

“வெள்ள நிவாரண பணிகளில் மத்திய அரசு, மாநில அரசுக்கு துணையாக இருக்கும் என பிரதமர் மோடி முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜக சார்பில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தசமயம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம். சென்னை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.

நிரந்தரமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். பெங்களூருவில் மழை பெய்த அரை மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடுகிறது. அதுபோன்று நிரந்தர தீர்வு காண வேண்டும்.

ஒவ்வொரு முறையும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அந்த தொகையை ஒருமுறை செலவு செய்து சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் அரசியல் ரீதியாக பேச தேவையில்லை.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டு கொடுத்துள்ளது திமுக அரசு என்றார். கம்யூனிஸ்ட் கூட்டணியில் உள்ளது என்பதற்காக விட்டு கொடுத்துள்ளனர்” எனக் கூறினார்.