கபடி எனக்கு பிடிக்கும் : வேட்டியை மடித்து கட்டி கபடியாடிய எச்.ராஜா

BJP H Raja
By Irumporai Sep 19, 2022 05:40 AM GMT
Report

 வேட்டியை மடித்து கட்டி களத்தில் கபடியாடிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கபடியில் இறங்கிய ஹெச் ராஜா

பிரதமர் மோடியின் பிறந்தநாள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழக பாஜக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மோடி கபடி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தொடங்கிவைத்தார்.

கபடி எனக்கு பிடிக்கும் : வேட்டியை மடித்து கட்டி கபடியாடிய  எச்.ராஜா | H Raja Participated In The Kabaddi

 அப்போது பேசிய எச்.ராஜா ஆர் எஸ் எஸ் பயிற்சி பாசறையில் கபடி விளையாடியதை நினைவுகூர்ந்தார். இதனையடுத்து கபடி போட்டியை தொடங்கி வைத்த எச். ராஜா கபடி களத்தில் இறங்கி விளையாடவும் செய்தார்.

அப்போது ரைடராக சென்ற அவர் எதிரணியில் இருந்த புதுக்கோட்ட மாவட்ட தலைவர் செல்வ அழகப்பனை அவுட் செய்தார். இதனையடுத்து உற்சாகமடைந்த பாஜகவினர் எச்.ராஜாவை தோளில் தூக்கி உற்சாகமாக கொண்டாடினர்.

கபடி எனக்கு பிடிக்கும்

இந்த கபடி போட்டியில் பங்கேற்றது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த எச்.ராஜா :

எனக்கு மிகவும் பிடித்தது கோட்டை தாண்டி தொட்டு பி(அ)டிப்பதே! புதுக்கோட்டையில் பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டதிலும் விளையாண்டதிலும் மட்டற்ற மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.