எச்.ராஜாவின் உடல்நிலை: மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
H Raja
By Fathima
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
NDTVயில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது எச்.ராஜா அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் உடல்நலம் முன்னேறி வருவதாகவும், அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
