விஜய்யை கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா
மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டு, அதே நபர் பொது மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதா என தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.
விவாகரத்து வழக்கு
விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக குறிப்பிட்டிருந்தார், பலமுறை சமரசம் பேச முயன்றும் விஜய் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறியிருந்தார்.
மேலும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய், தனக்கும்- தன் பிள்ளைகளுக்கும் சேர வேண்டிய ஜீவனாம்சம் தொகையை வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், சமீபத்தில் நடந்த திருமண வரவேற்பில் விஜய் நடிகை த்ரிஷாவுடன் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் தன்னை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி மறுப்பதுடன் மிரட்டல் விடுப்பதாக சங்கீதா புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே நேற்று தவெக சார்பில் மாமல்லபுரத்தில் சர்வதேச மகளிர் அணி விழா நடைபெற்றது.

ஹெச்.ராஜா விமர்சனம்
இதுகுறித்து விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பெற்றோர், உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பின்னாளில் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டு...
அதே நபர் பொது மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதும்...மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறி தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதும்..
தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு..!! என்று தெரிவித்துள்ளார்.
பெற்றோர், உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பின்னாளில் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டு...
— H Raja (@HRajaBJP) March 7, 2026
அதே நபர் பொது மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதும்...
மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து…