ஆதீனத்தை தொட்டால் திமுகவில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் - ஹெச். ராஜா சாடல்!

DMK BJP NEET H Raja
By Sumathi Jun 09, 2022 04:16 PM GMT
Report

மதுரை ஆதீனத்தை தொட்டால் திமுகவில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் என பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

 ஹெச்.ராஜா

தேனி பங்களா மேட்டில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. பாஜக தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார்.

ஆதீனத்தை தொட்டால் திமுகவில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் - ஹெச். ராஜா சாடல்! | H Raja Criticize Dmk Party

மாநிலச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, தமிழக மக்கள் வீதியில் வந்து நின்று திராவிட முன்னேற்றக் கழக அரசை தூக்கி எறிவார்கள்.

திமுக தேவை இல்லை

அந்த நிலை விரைவில் வரும். தமிழை வளர்க்க நமக்கு திமுக தேவை இல்லை. தமிழ் விரோத கட்சி அது. நமது தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன ஈவெராவின் வழிவந்த கூட்டத்தை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டும் மதுரையில் மாநாடு நடந்தது.

ஆதீனத்தை தொட்டால் திமுகவில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் - ஹெச். ராஜா சாடல்! | H Raja Criticize Dmk Party

மதுரை ஆதீனம் பற்றுள்ள நல்ல மனிதர். அவரை மிரட்டுகிறார்கள். ஆழ்வார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் உருவாக்கப்பட்ட பீடாதிபதியை மிரட்டுவீர்களா. அவரைத் தொட்டால் திமுகவில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். எல்லோரும் பாஜகவுக்கு வந்துவிடுவார்கள்.

கோவில்களில் இருந்து அரசை விரட்டியடிக்க ஆதீனம் தலைமையில் ஒன்று சேர்வோம். இன்று தமிழகத்தில் இருக்கும் அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. செய்ய முடியாது. அதற்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை இருக்கிறது அதை சொன்னால் அதை சர்ச்சை என்பீர்கள்.

ஒருவனால் ஒன்றுமே முடியாது என்றால் அதற்கு ஒரு பெயர் உண்டு. பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் என்ன பேசுவது என்றே தமிழக முதல்வருக்கு தெரியவில்லை. தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது திமுகதான்.

2010ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுகவும் மத்தியில் காங்கிரஸ் ஆண்ட போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது. அப்போது மோடி சர்க்காரா ஆட்சியில் இருந்தது? அப்போதெல்லாம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அப்போது கேட்டிருக்க வேண்டாமா மந்திரி சபையை விட்டு வெளியே வந்திருக்க வேண்டாமா?

நீட் தேர்வு அமலுக்கு வந்ததற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணம். உண்மையிலேயே தமிழக முதல்வருக்கு நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர் நீதிமன்றத்தின் கதவை தட்டியிருக்க வேண்டும்.

திமுக தமிழ் விரோதி தமிழன் விரோதி தமிழக விரோதி. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் 2031இல் தமிழகத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள்.

தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவிற்கு ஓட்டு போடுகிற ஒருவர்கூட தமிழனாக இருக்க முடியாது என்றார்.