அறநிலையத்துறை துப்புக்கெட்ட துறையாக உள்ளது - ஹெச்.ராஜா ஆவேசம்

H Raja Charity Department
By Thahir Oct 18, 2021 07:40 AM GMT
Report

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிற கோவில்களை பராமரிக்காமல் இந்த துறை துப்புக்கெட்ட துறையாக உள்ளது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, கோயில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் துவங்கி வைத்தார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் உள்ள பொன் இனங்களை உருக்கி 24 கேரட் சுத்த தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து எச்.ராஜா அவர்கள் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தங்கம் எடுப்பதில் வெளிப்படை தனமாய் இருக்க வேண்டும்.

தற்போது 3 திருகோயில்களில் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.எங்கேயாவது பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு, எந்தெந்தக் கோவில்களில் எவ்வளவு நகைகள் எடுக்கப்பட்டது என்று கூறினார்களா?

இதுபற்றிய விவரங்கள் யாருக்கும் தெரியாது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்களை எடுத்த நிலையிலேயே பராமரிக்க துப்புக்கெட்ட துறையாக இந்த துறை உள்ளது. அதாவது இந்த துறை திறமையற்ற, துப்புக்கெட்ட துறையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.