தமிழக அமைச்சர்கள் அரைவேக்காடுகள் : 100 நாட்களில் தமிழகம் சிதறி போய்விடும் - ஹெச்.ராஜா காட்டம்!
தமிழக அமைச்சர்கள் அரைவேக்காடுகள் என்றும் அவர்கள் படுத்தும் பாடு தாஙக முடியவில்லை என்றும் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில், பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்று காலத்தில் அதிமுக அரசு மதுக்கடையை திறந்தபோது, அமைச்சர்கள் கல்லா கட்ட மதுக்கடைகளை திறப்பதா? என கோஷம் போட்டவர் இன்றைய முதல்வர் என்றும் அப்போது எதிர்த்து போராட்டம் செய்து விட்டு இப்போது மதுக்கடையை உத்தரவிடுகிறார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழக அமைச்சர்கள் அரைவேக்காடுகள், இவர்கள் படுத்தும் பாடு தாங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 30 நாட்களில் கட்டுமான பொருட்கள் மூன்றில் ஒரு பங்கு விலை உயர்ந்துள்ளது. நடுத்தர மக்கள் இனி வீடு கட்ட நினைத்து பார்க்க முடியாது என்ற நிலைமை தான் உள்ளது. இதற்காக தான் திமுக ஆட்சிக்கு வந்தால் கொள்ளை நடக்கும் என்று கூறினோம், மக்கள் தான் கேட்கவில்லை இப்போது நன்றாக அனுபவிக்கிறார்கள் என கூறினார்.

திமுக என்றாலே கொள்ளை, கமிஷன் ஆட்சிதான். சிமெண்ட் கம்பெனிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு கடந்த 30 நாட்களில் மூட்டைக்கு ரூ.150 உயர்ந்துள்ளது தான் திமுக அரசின் சாதனை என தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகள் திறப்பதில் மற்ற மாநிலங்களை ஒப்பிடக்கூடாது முதல்வர் கல்வா? கட்டுவதற்காக தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுகிறதா? இது விடியல் ஆட்சி இல்லை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய மோசமான ஆட்சி என்று விமர்சித்துள்ளார்.
100 நாட்கள் பேச வேண்டாம் என இருந்தேன். 100 நாட்களில் தமிழகம் சிதறி போய்விடும். ஊடகங்கள் நேர்மை தர்மத்தை தவறி அறிவாலயட்திற்கு அடிமைகளாக ஊடகங்கள் இருப்பது சரியில்லை. காலம் மாறிவிடும் அப்போது ஊடகங்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.