கோயிலுக்குள்ள கிரிக்கெட் விளையாடுனா என்ன தப்பு.. அதை செய்தால்தான் தவறு - எச். ராஜா!

Tamil nadu Viral Video H Raja
By Swetha Oct 09, 2024 10:42 AM GMT
Report

நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

 எச். ராஜா

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா (40) தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். விசிக நிர்வாகி வீடியோ எடுத்ததற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கோயிலுக்குள்ள கிரிக்கெட் விளையாடுனா என்ன தப்பு.. அதை செய்தால்தான் தவறு - எச். ராஜா! | H Raja Answer Over Playing Cricket In The Temple

அப்போது கோயிலில்கிரிக்கெட் விளையாடலாமா? இது ஆகம விதிக்கு எதிரானது தானே? அதேபோல அனைவரையும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா? என கேட்டபோது இது எங்க கோயில் நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம் அதனை கேட்க நீ யார்? என்று ஒருமையில் தீட்சிதர்கள் பேசியுள்ளனர்.

விஜய் கட்சியால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை; அவர்களுக்குதான் சிக்கல் - எச்.ராஜா

விஜய் கட்சியால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை; அவர்களுக்குதான் சிக்கல் - எச்.ராஜா

கிரிக்கெட் 

பிறகு அங்கிருந்த தீட்சிதர்கள் இளையராஜாவை அடித்து அவரது செல்போனை பறித்துள்ளனர். இதுகுறித்து இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தீட்சிதர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோயிலுக்குள்ள கிரிக்கெட் விளையாடுனா என்ன தப்பு.. அதை செய்தால்தான் தவறு - எச். ராஜா! | H Raja Answer Over Playing Cricket In The Temple

இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது குறித்து பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், "சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை கோயில் கருவறையில் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு" என்று பதிலளித்துள்ளார்.