ஹெச்.ராஜா மனநோயாளி மக்கள் நீதி மய்யம் கண்டனம்
மோகன் இயக்கிய 'ருத்ரதாண்டவம்' படத்தின் சிறப்புக் காட்சி பாஜக மூத்த தலைவரான ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி, சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது.
அந்தச் சிறப்புக் காட்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ஹெச். ராஜா. ருத்ரதாண்டவம் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அவர் திடீரென ஆவேசமடைந்தார். மேலும் மனநோயாளி போல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதோடு பிற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் கீழ்த்தரமாக பேசினார் ஹெச். ராஜா.
இந்த பரப்பரப்பான கருத்துக்கு பலர் எதிர்ப்பு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகியில் தற்போது பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அதில்., "ஹிந்து இல்லாவிட்டால் தமிழ் எங்கிருந்து வந்தது? ஹிந்து இல்லாவிட்டால் தமிழ் ஏது?" என கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடியின் தமிழ் மொழியை இழிவுபடுத்தும் வகையில் ஆவேசப்பட்டதோடு
ஊடகவியலாளர்களைப் பார்த்து "you all media people Presstitues" என மனநோயாளி போல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதோடு பிற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் கீழ்த்தரமாக பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தான் வகிக்கின்ற பதவிக்கும், வயதுக்கும் உள்ள பொறுப்பை உணராமல் அதனை தட்டிக் கழித்து பத்திரிகையாளர் சந்திப்பு, அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தொடர்ந்து சபை நாகரீகம் இன்றி பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள ஹெச்.ராஜா அரசியலில் இருந்தே அகற்றப்பட, புறக்கணிக்கப்பட வேண்டிய தீயசக்தியாகும்.
மக்கள் மனதில் தொடர்ந்து மததுவேச கருத்துக்களை பதிய வைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள ஹெச்.ராஜா மீது தமிழக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.