சீமானின் அம்மா தமிழச்சியா? தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா - கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள்

Media Angry Speech Peoples H. Raja
By Thahir Sep 28, 2021 08:18 AM GMT
Report

ருத்ரதாண்டம் திரைப்படம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா அரசியல் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் உங்களுக்கு தமிழ் முழுசா தெரியுமா? என கேள்வி எழுப்பினார்.தமிழின் சிறப்பை பற்றி எடுத்து சொல்ல தெரியாத ரொம்ப பேர் தமிழ் பேசுறீங்க என கூறினார்.

சீமானின் அம்மா தமிழச்சியா? தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா - கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள் | H Raja Angry Speech Media Peoples

ஹிந்து இல்லைனா தமிழ் எங்கையா வந்தது என செய்தியாளர்களை ஒருமையில் பேசிய அவர் செய்தியாளர்கள் அனைவரும் கடன்காரர்கள் என கடுமையாக விமர்சித்தார்.

தமிழ் வேறு ஹிந்து வேறு என்று மதமாற்றத்திற்கு துணை போக வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டார். சீமான் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஆவேசமாக பதிலளித்த ஹெச்.ராஜா சீமானின் அம்மா முதல்ல தமிழச்சியா? அவர் ஒரு மலையாளி என குறிப்பிட்டார்.

தன்னை பீஹாரி என்று ஒரு முட்டாள் கூறுவதாகவும் தெரிவித்தார்.தான் ஒரு பச்ச தஞ்சாவூரான் ஆகவே தமிழ் ஹிந்துன்னு பேசாதீங்க என தெரிவித்தார்.

ஆரியர்கள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.அப்போது பேசிய அவர் பைய சொன்னது ஆரியர்கள் பற்றி சுப.வீரபாண்டியன் மூளை ஒரு குப்பை தொட்டி என கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர் சுப.வீரபாண்டியன் அறிவாலயத்தில் உட்காந்திருக்கும் பிச்சைகாரன் என்று கடுமையாக விமர்சித்த அவர் ஆரிய படையெடுப்பு என்ற இந்த கட்டுக்கதைக்கு சரியான இடம் குப்பை தொட்டி என்றும் இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை நண்பரே உங்க மூளைய குப்பை தொட்டி ஆக்காதீங்க என பேசிவிட்டு எழுந்து சென்றார்.

இந்த நிகழ்வு தற்போது அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஊடகவியலாளர்களை இழிவுப்படுத்தி பேசும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரபல ஊடகவியலாளர் செந்தில் வேல் அவர் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் மேலும் ஊடகங்கள் அவரின் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணிக்க வேண்டும் என அனைத்து ஊடக ஆசிரியர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.