மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் எச்.ராஜா!

H Raja
By Fathima Jan 31, 2026 05:35 AM GMT
Report

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திடீர் உடல்நலக்குறைவு

பிரபல தனியார் தொலைக்காட்சியில் விவாதத்தில் கலந்து கொண்ட சென்றிருந்த எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் எச்.ராஜா! | H Raja Admitted In Hospital Bjp Leader

எஸ்.ஜி.சூர்யா பதிவு

தமிழ்நாடு பாஜக இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,  “பா.ஜ.க மூத்த தலைவர் @HRajaBJP அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் சீராக நலம் பெற்று வருகிறார். விரைவான குணமடைவிற்காக அனைவரின் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறோம். 🙏” என பதிவிட்டுள்ளார்.