‘‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை’’-அமைச்சர் மூர்த்தி குற்றச்சாட்டு.
By Irumporai
மதுரை தோப்பூர் பகுதியில் உள்ள அரசு நுரையீரல் மருத்துவமனையில் இரண்டாம் கட்டமாக 150 ஆக்சிஜன் படுக்கை கொண்டு அமைக்கப்படும் கொரோனா மையத்தை பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டினார்.
மேலும், கொரோனா தொற்று மதுரையில் குறைந்து வருவதாகவும்
தடுப்பூசி பற்றகுறையை பாஜக மட்டுமின்றி அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என எனக் கூறினார்..