அந்த நடிகருக்காகத்தான் எழுதினேன்; ஆனால் சிம்பு நடிச்சார் - VTV ரகசியம் பகிர்ந்த கெளதம் மேனன்
விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் குறித்து கெளதம் மேனன் தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
கெளதம் மேனன்
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடித்திருந்தார்கள். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று பல வருடங்களாகவே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த கவுதம் மேனன் ‘தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து நான் ஒரு படம் இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
VTV
எனவே, அவருக்காக ஒரு கதை எழுத துவங்கினார். அவர் ஆக்ஷன் படங்களில் நடிப்பவர். ஆனால், எனக்கு காதல் கதைதான் மனதுக்கு தோன்றியது. கதை யோசித்த போது ‘இந்த உலகத்துல இவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெர்சிய லவ் பண்ணேன்’ என்கிற வசனத்தைதான் முதலில் எழுதினேன்.
மகேஷ்பாபு அந்த கதையில் நடிக்க விரும்பவில்லை. அதன்பின்னர்தான் அந்த படத்திற்குள் சிம்பு வந்தார்’ எனத் தெரிவித்துள்ளார்.