குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது: ஸ்டாலின்

india election tamilnadu
By Jon Feb 12, 2021 11:48 AM GMT
Report

கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக ஸ்டாலின் உள்ளிட்ட 19 தி.மு.க எம்.எல்.ஏக்களளுக்கு பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனைத் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கில், நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது சென்னௌ உயர்நீதிமன்றம்.எனினும் தவறுகளை களைத்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிவித்திருந்தது.

இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில், பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து இன்று (பிப். 10) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டுசென்று காண்பித்தோம். கமிஷன் வாங்கிக் கொண்டு அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள்.

முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயர் நீதிமன்றம். அடங்காமல் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயர் நீதிமன்றம். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம்.

இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது! குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும்!". இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.