தமிழகத்தை உலுக்கிய குட்கா வழக்கு : மார்ச் 20 க்கு ஒத்திவைப்பு
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
குட்கா முறைகேடு
அதிமுக ஆட்சியில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது ஏற்கனவே, இந்த வழக்கு இன்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், பிழைகளை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை.
கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததால், வழக்கு விசாரணை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20 க்கு ஒத்தி வைப்பு
இந்த நிலையில் குட்கா வழக்கு விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கபட்டது. ஆனால் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இந்த சர்ச்சையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர், முன்னாள் டிஜிபி, சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.
இந்த நிலையில் குட்கா வழக்கு விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.