குருவும், சுக்கிரனும் ஆடப்போகும் ஆட்டம் - 3 ராசிகளுக்கு தலையெழுத்தே மாறப்போகுது!
குரு சுக்கிரன் உருவாக்கும் ஷாடங்க யோகம் நடைபெறவுள்ளது.
சுப கிரகங்களான குரு பகவானும், சுக்கிரனும் நவம்பர் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 100 டிகிரி கோணத்தில் சஞ்சரித்து ஷடாங்க யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது.

தனுசு
தொழிலதிபர்கள் புதிய ஆர்டர்கள் மூலம் லாபம் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகளையும், புதிய பொறுப்புகளையும் பெற வாய்ப்புள்ளது. முன்னர் சேமித்த சேமிப்புகள் அல்லது முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கலாம். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கடகம்
நிலுவையில் இருந்த கடன் பிரச்சனைகள் முடிவடையும். கைக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும். நிதி நிலைமை மற்றும் பொருளாதாரம் வலுவடையும். முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி பெருகும். வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
கன்னி
தொழிலில் புதிய உச்சங்களை அடைவீர்கள். வேலையில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பழைய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். தனிப்பட்ட உறவுகளில் புரிதல் மேலோங்கும். புதிய வேலை, புதிய வாகனம், புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.