குரு பெயர்ச்சி 2022 - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எப்படி இருக்கப்போகிறதுன்னு தெரியுமா?
இன்னும் சில தினங்களில் குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சி நடைபெறும். இந்த குருபெயர்ச்சியை பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக முதலமைச்சருக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி அமையப்போகிறது என்பதைப் பார்ப்போம் -
இந்த முறை குரு பெயர்ச்சி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு நிகழப்போகிறது.
குரு பகவான் கடகம், கன்னி, விருச்சிகம் ராசிகளை பார்க்கிறார். சிம்ம ராசிக்கு அஷ்டம ஸ்தான குரு என்றாலும் விபரீத ராஜயோகத்தை தரப்போகின்றது.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம்.
கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பார்க்கும் போது பரிவர்த்தனை யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், விரின்சி யோகம், பர்வத யோகம், யவன யோகம், லட்சுமி யோகம் என பல யோகங்கள் இருக்கின்றன.
இத்தனை யோகங்கள் இருப்பதால்தான் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகும் யோகம் கை கூடி வந்தது. நம்பர் 1 முதல்வர் என்ற பாராட்டும் கிடைத்துள்ளது.
செப்டம்பர் முதல் நவம்பர் வரை குரு பகவான் சஞ்சாரம் சாதகமாக இல்லாமல் இருப்பதால் முதலமைச்சருக்கு உடல் சோர்வு, அசதி ஏற்படும். எதிரிகளின் கை ஓங்கும். கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும்.
மேலும், டிசம்பர் மாதத்திற்குப் பிறகு முதலமைச்சர் பேச்சில் கனிவும், செயல்களில் துணிவும் ஏற்படும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் நீங்கி விடும்.
கும்ப ராசியில் ஆட்சி பெற்று அதிசாரமாக அமரப்போகும் சனிபகவான் கண்டச்சனி என்றாலும் கவலை வேண்டியதில்லை.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, அதிசார சனி பெயர்ச்சி அரசியல் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்த உள்ளது.