நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: குருமூர்த்தி நேரில் ஆஜராக நோட்டீஸ்

court tamilnadu notice
By Jon Jan 25, 2021 02:18 PM GMT
Report

சமீபத்தில் நடந்து முடிந்த துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி பல சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில் நீதித்துறையையும் நீதிபதிகளையும் அவமதிக்கும் விதத்தில் பேசியிருந்தார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்து குருமூர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நீதித்துறையை அவமதிக்கும் விதத்தில் பேசியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை வழக்கறிஞரிடம் மூத்த வழக்கறிஞர் துரைசாமி புகார் அளித்து இருந்தார்.

அந்தப் புகாரில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப். 16-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குருமூர்த்திக்கு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.