சனியின் மீது விழும் குரு பார்வை - இந்த 2 ராசி கொடுத்துவச்சவங்கதான்..
குருவின் பார்வை மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவானின் மீது விழுகிறது.
சனி பகவான் அக்டோபர் 04 ஆம் தேதி குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இதனால் குருவின் மங்களகரமான பார்வையானது சனி பகவான் மீது விழுகிறது.
இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றங்களை காணவுள்ளனர்.
மகரம்
பணியிடத்தில் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அந்த பிரச்சனை முடிவுக்கு வரும். போராட்டமிக்கதாக இருந்த வாழ்க்கை மாறி, வாழ்வில் சந்தோஷமும், செழிப்பும், நிறைந்திருக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும்.
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பெற்றோர், ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வதோடு, குளிக்கும் நீரில் மஞ்சள் சேர்த்து குளித்து, மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும்.
கன்னி
உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் தீரும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.