சென்னை ஆவடியில் பயிற்சியின்போது வீட்டிக்குள் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு - பரபரப்பு சம்பவம்
கடந்த சில மாதங்களுக்கு முன், புதுக்கோட்டையில், துப்பாக்கிசூடு பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில், பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே உள்ள துப்பாக்கி சூடு பயிற்சி மையத்திலிருந்து, எதிர்பாராத விதமாக சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்தது. நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இன்று சென்னை ஆவடி மையத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி சூடு பயிற்சியின்போது துப்பாக்கிக் குண்டு அருகே உள்ள வீட்டிற்குள் பாய்ந்தது.
வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையை துளைத்துள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.