ஒரே இரவில் 20 நாய்கள் சுட்டுகொலை - என்ன காரணம்? ஷாக் சம்பவம்!
மர்ம கும்பல் 20 நாய்களை சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுகொலை
தெலங்கானா மாநிலம், மகபூப்நகர் பகுதியில் கடந்த மாதம் ஒரே இரவில் 20 தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது நாய்கள் அனைத்தும் துப்பாகியால் சுட்டு உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காரில் முகமூடி அணிந்து இரவில் வந்த மர்மநபர்கள் நாய்களை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஷாக் சம்பவம்
இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஹைதராபாத்தை சேர்ந்த நரசிம்ம ரெட்டி தனது நண்பர்களுடன் இந்த சம்பவத்தை செய்த்தாக தெரியவந்தியுள்ளது.
அதாவது, கடந்த மாதம் அவர் மகபூப்நகறில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் வளர்ப்பு நாய்களையும் அழைத்துச் சென்றுள்ளார்.
வாக்கிங் சென்ற இரண்டு நாய்களையும், அப்பகுதியை சேர்ந்த தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்தன. இதில், ஒரு நாய் உயிரிழக்க, மற்றொரு நாய் படுகாயம் அடைந்தது.
இதனால், ஆத்திரமடைந்த நரசிம்மா ரெட்டி, தனது நண்பர்களுடன் சென்று கிராமத்தில் உள்ள 20 தெருநாய்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து, நரசிம்மா ரெட்டியும், அவரது 2 நண்பர்களையும் தெலங்கானா போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.