மெக்சிக்கோவில் துப்பாகிசூடு; மேயர் உள்ளிட்ட 18 பேர் உயிரிழப்பு

Mexico Death
By Thahir Oct 06, 2022 07:42 AM GMT
Report

மெக்சிக்கோவில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேயர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

18 பேர் உயிரிழப்பு 

மெக்சிக்கோவின் குரேரோ மாநில சிட்டி ஹாலில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மிகுல் தோதொலபன் நகர மேயர் மெண்டோசா அல்மேடா உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிக்கோவில் துப்பாகிசூடு; மேயர் உள்ளிட்ட 18 பேர் உயிரிழப்பு | Gunfire In Mexico 18 People Lost Their Lives

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள குரேரோ மாநில கவர்னர் எவெலின் சல்கடோ பின்னேடா, மேயர் மற்றும் அரசு அலுவலகர்கள் மீது நடத்தப்பட்ட வன்மத் தாக்குதல்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் உறுதியாக உள்ளோம். சான் மிகுல் தொதொலபன் நகரத்து மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.