துப்பாக்கியை நெஞ்சில் வைத்து செல்பி - இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
உத்திரபிரதேசத்தில், துப்பாக்கியுடன் செல்பி எடுத்த பெண், துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தில் வசிக்கும் ராதிகா என்ற இளம்பெண், கடந்த மே மாதம், ஆகாஷ் குப்தா என்ற நபரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்கள் குடும்பமாக நகைக்கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவரின் வீட்டின் மாடியில் கடந்த வியாழக்கிழமை துப்பாக்கியுடன் செல்பி எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது நெஞ்சில் துப்பாக்கி வைத்தவாறு போஸ் கொடுத்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்த குண்டு அவரின் நெஞ்சில் பாய்ந்தது.
இதில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடித்து அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.