கடும் துப்பாக்கி சண்டை 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
மகாராஷ்டிராவின் காட்சிரோலி மாவட்டத்தில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் கோயல் கூறுகையில்,
"மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே என்கவுன்ட்டர் நடந்தது.
இதில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மார்டிண்டோலா வனப் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.
கூடுதல் எஸ்.பி. சவுமியா முண்டே தலைமையில் போலீஸ் கமாண்டோ படையினர் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
காவல்துறை சார்பில் 4 பேர் காயமடைந்தனர்" என்றார். முன்னதாக, இன்று காலை மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ கர்னல் அவரது குடும்பத்தினர், ராணுவ வீரர்கள் என 6 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்தவித அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் மாவோயிஸ்டுகளாக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையில், காட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.