கும்மிடிப்பூண்டி பிரச்சாரத்தில் எதுவும் பேசாத விஜயகாந்த்! என்ன நடந்தது?
கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்துக்கு வந்த விஜயகாந்த் எதுவும் பேசாமல் தொண்டர்களுக்குக் கையை மட்டும் அசைத்து காட்டினார். சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தற்போது பிரேமலதா மட்டுமே 60 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இத்தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜயகாந்த் நேற்று கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேனில் இருந்த படியே அவர் தொண்டர்களை நோக்கி கையை மட்டும் அசைத்து காட்டினார். ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
இதற்கு என்ன காரணம் என்றால், சமீபகாலமாக விஜயகாந்த் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டதால் வீட்டில் இருந்த படியே ஓய்வு எடுத்து வந்தார். அதனால் மருத்துவர்கள் அவரை உங்களை நீங்கள் சிரமப்படுத்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.